அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது
அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது
அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது
ADDED : செப் 21, 2025 10:17 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பல மணி நேரத்திற்கு பிறகு, 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் படேல் செப்டம்பர் 16ம் தேதி தான் நடத்தி வரும் பெட்ரோல் பங்கில் பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை சுட்டுவிட்டு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் விசாரணையில் உயிரிழந்தது குஜராத்தி பெண் என்பது தெரியவந்தது. பின்னர் கொள்ளையன் ஜைடன் மேக் ஹில் என்று அடையாளம் காணப்பட்டான். அவனை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். தென் கரோலினா சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜைடன் மேக் ஹில் பதுங்கி இருந்த இடத்தை அடைந்தனர்.
அங்கு, ஜைடன் மேக் ஹில்லுக்கும், சட்ட அமலாக்க நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. இருப்பினும், பல மணி நேர மோதலுக்கு பிறகு ஜைடன் மேக் ஹில்லை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.