/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000
ADDED : ஜூலை 26, 2011 11:26 PM
சிவகங்கை:''அ.தி.மு.க.., அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்,'' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் இலவச காப்பீடு திட்டம் செயல்பட்டது. இதில் அனைத்து நோய்களுக்கும் முறையான சிகிச்சை கிடைக்கவில்லை. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றால், முதலில் பணத்தை கட்டுமாறு வற்புறுத்தினர். இதனால், மக்களுக்கு இத்திட்டத்தின் முழு பலன் கிடைக்கவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, தி.மு.க., அரசு கொண்டு வந்த அரசு காப்பீடு திட்டத்தை ரத்து செய்தது. இதற்கு மாற்றாக, புதிய காப்பீடு திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகள் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெறலாம் என்றிருந்ததை, அ.தி.மு.க., அரசு ரூ.1.50 லட்சமாக உயர்த்தியது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வழக்கம் போல் இதற்கான வி.ஏ.ஓ., சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்காக அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.மானாமதுரை, வேம்பத்தூர் கிளைக்கு சென்று டி.டி., எடுத்து கொள்ளுங்கள் என வங்கியில் அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் 30 கி.மீ., தூரமுள்ள மானாமதுரை, போக்குவரத்து வசதியில்லாத வேம்பத்தூர் கிளைக்கு சென்று டி.டி., எடுக்க மக்கள் அலைய வேண்டியநிலை உள்ளது.
வங்கி மேலாளர் கிறிஸ்டோபர் கூறுகையில்,''சென்னையிலிருந்து டி.டி.,வர வேண்டும். குறிப்பிட்ட அளவே அனுப்புவதால் விரைவில் தீர்ந்து விடுகிறது. அந்தந்த வங்கிக்குரிய கோடு நம்பரோடு டி.டி., பிரிண்ட் செய்யப்படுவதால், அடுத்த கிளைக்குரிய டி.டியை பயன்படுத்த முடியவில்லை. தலைமையிடம் விரைந்து அனுப்ப கோரியுள்ளோம்'' என்றார்.