"ராஜா தெரிவித்த வாதங்களை அரசுக்கு எதிரான ஆதாரங்களாக கருதக்கூடாது'
"ராஜா தெரிவித்த வாதங்களை அரசுக்கு எதிரான ஆதாரங்களாக கருதக்கூடாது'
"ராஜா தெரிவித்த வாதங்களை அரசுக்கு எதிரான ஆதாரங்களாக கருதக்கூடாது'

புதுடில்லி : 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, கோர்ட்டில் தெரிவித்த வாதங்களை, அரசுக்கு எதிரான ஆதாரங்களாக கருதக் கூடாது' என, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நேற்று, தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஆகியோரின் பெயர்களையும் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், நேற்று கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ராஜா, கோர்ட்டில் தெரிவித்த வாதங்களை அடிப்படையாக வைத்து, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், ராஜினாமா செய்ய வேண்டும் என, கூறியுள்ளார்.
ஒரு கட்சியின் தேசிய தலைவர், இவ்வாறு கூறியிருப்பது, துரதிர்ஷ்டவசமானது. இந்த கருத்தை தெரிவிப்பதற்கு முன், பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான அருண் ஜெட்லியுடன், அவர் ஆலோசித்திருக்க வேண்டும். ராஜா, கோர்ட்டில் தெரிவித்த வாதங்களை, அரசுக்கு எதிரான ஆதாரமாக கருதக் கூடாது. யுனிடெக், ஸ்வான் நிறுவனங்கள் விவகாரத்தில், பங்குகள் விற்பனை எதுவும் நடக்கவில்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க, பா.ஜ., மறுத்து வருகிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


