ADDED : ஜூலை 25, 2011 02:11 AM
மதுரை : மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(34).
கே.கே.
நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தார்.
சென்னையில் பயிற்சிக்காக சென்றிருந்த இவர், நேற்று முன் தினம் இரவு ஆம்னி
பஸ்சில் மதுரை புறப்பட்டார். நேற்று காலை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இவரை
எழுப்பியபோது இறந்து கிடந்தார். மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்ற
கோணத்தில் திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.