Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கிடப்பில் போடப்பட்ட நீச்சல் குளம் பணிகள் எப்போது : மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பது

கிடப்பில் போடப்பட்ட நீச்சல் குளம் பணிகள் எப்போது : மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பது

கிடப்பில் போடப்பட்ட நீச்சல் குளம் பணிகள் எப்போது : மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பது

கிடப்பில் போடப்பட்ட நீச்சல் குளம் பணிகள் எப்போது : மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பது

ADDED : ஜூலை 24, 2011 09:47 PM


Google News

தேனி : கிடப்பில் போடப்பட்ட நீச்சல் குளம் பணிகள், பழுதடைந்த உடற்பயிற்சி கூடங்கள், பராமரிப்பற்ற விளையாட்டு மைதானம், என பயனற்ற நிலையில் உள்ள தேனி மாவட்ட விளையாட்டு அரங்கை சீரமைப்பது எப்போது, என்ற ஏக்கத்தில், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளனர்.

மாவட்ட தலைநகரங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கம் மற்றும் மைதானங்கள் உள்ளன. பல மாவட்டங்களில் இவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தேனி மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இருப்பதே பலருக்கு தெரியாத நிலைதான் உள்ளது. அந்தளவுக்கு இதன் செயல்பாடுகள் மோசமாக இருப்பதுடன், பயனற்றதாகவும் அமைந்துள்ளது.



மைதானம் பராமரிப்பின்றி, புதர் மண்டி கிடக்கிறது. முறையான ஓடுதளம் வசதியும் இதுவரை செய்யப்படவில்லை. உடற்பயிற்சி கூடங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. உள் விளையாட்டு அரங்கங்களில் விளையாட்டு உபகரணங்கள் இல்லை. நீச்சல் குளம் கட்டும் பணி துவங்கி பல ஆண்டுகள் ஆகியும் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. டென்னிஸ் மைதானத்தில் புதர் மண்டி கிடக்கிறது. விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதிகளோ இல்லாததால் அவதிப்படுகின்றனர். விளையாட்டு மைதானத்தில் புல்தரை அமைக்கவும், ஓடுதளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். விளையாட்டு மைதானத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விளையாட்டு ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us