மும்பை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை உயர்ந்தது
மும்பை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை உயர்ந்தது
மும்பை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை உயர்ந்தது
ADDED : ஜூலை 23, 2011 03:00 PM
மும்பை: மும்பை குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் பலியானதை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் கடந்த 13ம் தேதி 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 19 பேர் பலியானார்கள். அடுத்தடுத்து 2 பேர் இறக்கவே பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இந்நிலையில் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த சுரேந்தர் சிங்(30) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன . இதனைதொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனையில் இன்னும் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிமாக உள்ளதாக கூறப்படுகிறது.


