ADDED : ஜூலை 18, 2011 01:18 AM
ஓசூர்: ஓசூர் கொல்லப்பள்ளி அரசு உருது நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு களப்பயணம் சென்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள், முக்கிய இடங்களுக்கு களப்பயணம் அழைத்து சென்று வருகின்றனர். ஓசூர் கொல்லப்பள்ளி அரசு உருதுப்பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் தொரப்பள்ளி ராஜாஜி நினைவு இல்லம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் புதுபஸ்ஸ்டாண்ட் ஆகியவற்றுக்கு அழைத்து சென்றனர். ராஜாஜி நினைவு இல்லம், அவர் படித்த ஓசூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின், ஓசூர் முன்மாதிரி ரயில்வே ஸ்டேஷனில் சென்று டிக்கெட் முன்பதிவு, ரயில்களை பார்த்தனர். புது பஸ் ஸ்டாண்ட்டில், கம்ப்யூட்டர் முன்பதிவு மையம், பஸ்கள் கால அட்டவணை ஆகியவற்றை பார்வையிட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பஸ் வழித்தடங்கள், டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை ஆகிவற்றை விளக்கி கூறினர். இதேபோல், ஓசூர் காமராஜர் காலனி அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களும் ஓசூரின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.