காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற அமைச்சரை முற்றுகையிட்ட உறவுகள்
காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற அமைச்சரை முற்றுகையிட்ட உறவுகள்
காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற அமைச்சரை முற்றுகையிட்ட உறவுகள்
பதேபூர் : உத்தரப்பிரதேச மாநிலம், பதேபூரில் கல்கா விரைவு ரயில் விபத்தில், காயம் அடைந்தவர்களை, புதிய ரயில்வே அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற தினேஷ் திரிவேதி, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பதேபூரில் கடந்த 10ம்தேதி, கல்கா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகழ்ந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தில், புதிய ரயில்வே அமைச்சராக தினேஷ் திரிவேதி பதவியேற்றார். பதவியேற்ற பின், ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அவர்கள், நேற்று முன்தினம், இரவு 11.20 மணிக்கு பதேபூர் மருத்துவமனைக்குச் சென்று, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், அமைச்சரை முற்றுகையிட்டனர். போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 'போலீசும், ரயில்வே அதிகாரிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எங்களிடம் தெரிவிக்காமல், பலியானோரின் உடல்களை போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்' என, குற்றம் சாட்டினர்.
நடந்த விபத்து மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சரிடம், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


