/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மாணவருக்கு ஊக்குவித்தல் பயிற்சிவித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மாணவருக்கு ஊக்குவித்தல் பயிற்சி
வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மாணவருக்கு ஊக்குவித்தல் பயிற்சி
வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மாணவருக்கு ஊக்குவித்தல் பயிற்சி
வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மாணவருக்கு ஊக்குவித்தல் பயிற்சி
ADDED : ஜூலை 12, 2011 12:47 AM
ராசிபுரம்: ராசிபுரம், வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவ,
மாணவியருக்கான ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி இயக்குனர்
ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார். தாளாளர்
நடராஜன், கல்விக்குழு இயக்குனர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பேராசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து
வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பங்கேற்று பேசுகையில்,''பெற்ற
தாய், தந்தையரே வாழ்வின் முதல் தெய்வம். அவர்களை போற்றி பாதுகாக்க
வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நிகரானவர்கள்.
புத்தகங்கள் படிப்பதே வாழ்க்கை அனுபவத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தாழ்வு
மனப்பான்மையில் சிக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி முதுகலை உதவி
ஆசிரியர் நாராயணசாமி, பள்ளிச் செயலாளர் பிரகாஷ், துணைச் செயலாளர்
சவுந்தரராஜன், பள்ளி முதல்வர் பழனிவேல், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட
பலர் பங்கேற்றனர்.