ரேஷன் கடை தாமதமாக திறப்பதைகண்டித்து மறியல்: போலீஸ் தடியடி
ரேஷன் கடை தாமதமாக திறப்பதைகண்டித்து மறியல்: போலீஸ் தடியடி
ரேஷன் கடை தாமதமாக திறப்பதைகண்டித்து மறியல்: போலீஸ் தடியடி
செஞ்சி;செஞ்சி அருகே, ரேஷன் கடை தாமதமாக திறப்பதை கண்டித்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா களையூர் கிராம ரேஷன் கடையை, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் நடத்தி வருகின்றனர்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், பகல் 12 மணிக்கு செஞ்சி - திண்டிவனம் நெடுஞ்சாலையில், களையூர் கூட்ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், திடீரென தடியடியில் இறங்கினர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த செஞ்சி டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், கூடியிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.இதன் பிறகு அங்கு வந்த தாசில்தார் மற்றும் டி.எஸ்.ஓ., ஆகியோர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரேஷன் கடை ஊழியரை மாற்றம் செய்வதாக உறுதியளித்தனர். இதனால், கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.தடியடி நடத்திய பிறகு, மறியலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். செஞ்சி, நாட்டார்மங்கலம் பகுதியில் இருந்து பஸ்சில் வந்து இறங்கியவர்களை, போலீசார் பிடித்து வேனில் ஏற்றி செஞ்சிக்கு அழைத்து வந்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., பொதுமக்களை உடனே விடுவிக்கும்படி கூறியதால், மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டனர்.


