/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் பஸ்ஸ்டாண்ட் புறநகருக்கு மாறுமா?: அவதிப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்புகரூர் பஸ்ஸ்டாண்ட் புறநகருக்கு மாறுமா?: அவதிப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் பஸ்ஸ்டாண்ட் புறநகருக்கு மாறுமா?: அவதிப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் பஸ்ஸ்டாண்ட் புறநகருக்கு மாறுமா?: அவதிப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் பஸ்ஸ்டாண்ட் புறநகருக்கு மாறுமா?: அவதிப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 06, 2011 03:26 AM
கரூர்: திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் என்ற பெயரில் புதிய மாவட்டம்
உருவாகும் முன்பு கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, தற்போது உள்ள
இடத்தில் பஸ்ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது. ஆரம்பத்தில் 50 பஸ்கள்
நிறுத்தப்படும் வகையில் இருந்த பஸ்ஸ்டாண்ட், பிறகு நான்கு ஆண்டுகளில் 70
பஸ்கள் வரை நிறுத்தும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ்ஸ்டாண்டில் டவுன் பஸ்களும்
தற்போது நிறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர்,
சேலம் மற்றும் மதுரை நகரங்களை இணைக்கக் கூடிய மையமாக கரூர் உள்ளது.
கரூர் தனி மாவட்டமாக செயல்பட ஆரம்பித்த பின், டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி
கட்டும் தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழிலும் அதிகரித்தது. இதனால்
நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் திருச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட
பகுதிகளில் இருந்து கரூருக்கு வருகின்றனர்.
குறிப்பாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பஸ்களும், 1,000க்கும் மேற்பட்ட
பொதுமக்களும் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர். இதனால் கரூர் பஸ்
ஸ்டாண்ட் பகுதிகளான கோவை ரோடு மற்றும் ரவுண்டனா பகுதிகளில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து நகர மையப்பகுதியில் உள்ள கரூர் பஸ்ஸ்டாண்டை, புறநகர் பகுதிக்கு
மாற்ற வேண்டும்' என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 'கரூர்
நகராட்சி கூட்டத்திலும், கரூர் பஸ்ஸ்டாண்டை சுக்காலியூர் பகுதிக்கு மாற்ற
வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் கரூர் வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவும், '
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு நவீன
வசதியுடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்து சென்றனர்.
ஆனால் ஏதும் நடக்கவில்லை. இதனால் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில்
கரூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் பஸ்
ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள பகுதியில் மினி பஸ்களும் நிறுத்தப்படுவதால்,
விழாக்காலங்களில் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி
வருகின்றனர். எனவே, கரூர் நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை
தடுக்க, பஸ் ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


