ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சென்னையில் 3 பேர் சிக்கினர்!
ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சென்னையில் 3 பேர் சிக்கினர்!
ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சென்னையில் 3 பேர் சிக்கினர்!
ADDED : மே 22, 2025 07:59 AM

சென்னை: சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நகை கடைக்கு பணத்தை கொண்டு செல்ல கடத்தி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.