/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/படகு இல்லத்தில் மேம்பாட்டு பணி நடக்குமா? நம்பலாமா?படகு இல்லத்தில் மேம்பாட்டு பணி நடக்குமா? நம்பலாமா?
படகு இல்லத்தில் மேம்பாட்டு பணி நடக்குமா? நம்பலாமா?
படகு இல்லத்தில் மேம்பாட்டு பணி நடக்குமா? நம்பலாமா?
படகு இல்லத்தில் மேம்பாட்டு பணி நடக்குமா? நம்பலாமா?
ADDED : ஜூலை 26, 2011 10:25 PM
திருப்பூர் : ஆண்டிபாளையம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தில், ரூ.2.96 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
அப்பணிகள், கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந் தன. அக்கோப்புகளை தூசி தட்டி எடுத்த கலெக்டர் மதிவாணன், மேம்பாட்டு பணிகளை விரைவில் மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆண்டிபாளையத்தில் உள்ள குளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2.96 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா, நடைபாதை அமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, விளையாட்டு பூங்கா 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நுழைவாயில் ஏழு லட்சத்திலும், மூன்று லட்சத்தில் கழிப்பிடம், 10 லட்சத்தில் நடைபாலம் என 35 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஆனால், பல மாதங்களாகியும் அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப் பில் போடப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் மதிவாணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உள்ளூர் திட்டக்குழுமம், பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம் ஊராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை அழைத்து, குளக்கரையில் அமர்ந்து ஆய்வு நடத்தினார். திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட பழைய கோப்புகள், வரைபடங் கள், தொடர்புடைய கடிதங்கள் தூசி தட்டப்பட்டு, பிரித்து படிக்கப்பட்டன. ஒவ்வொரு கடிதத்துக்கும் பெறப்பட்ட பதில்கள் ஆய்வு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண் டிய பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. இப்பணியை கண்காணிக்கும் அலுவலராக ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அதன்பின், கலெக்டர் மதிவாணன் கூறியதாவது:மாவட்டம் முழுவதும் 100 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பூங்காக்கள் அமைப்பதோடு மட்டுமின்றி, பயன்பாட்டில் உள்ள பூங்காக்களை பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்துவோருக்கு, அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில் இன்சூரன்ஸ் செய்ய வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து படகு இல்லத்தை மேம்படுத்தும் பணி செயல்படுத்தப்படும். சாமளாபுரம் குளத்தையும் மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும். தேர்தல் காரணமாக, கடந்த சில மாதங்களாக இப்பணியை அதிகாரிகள் தொடராமல் விட்டு விட்டனர். இனி, விரைவாக பணிகள் தொடரும். இப்பணியில் தனியாரின் பங்கும் வரவேற்கப்படுகிறது. குளக் கரையை பலப்படுத்த அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர், என்றார்.