உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சியில் உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.உடுமலை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், மக்களிடம் குறைகளை கேட்கிறார்.
பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் இக்காலனி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும்; இலவச வீட்டு மனை பட்டா தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்', என தெரிவித்தார். குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சுந்தரசாமி, உடுமலை தொகுதி செயலாளர் பாண்டியன், ஊராட்சி செயலாளர் அன்பர்ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.