இதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசன் தாக்கப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாயினர். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையை எதிர்பார்த்து பரமக்குடியில் பலர் காத்திருந்தனர். தூத்துக்குடியில் பகல் 12 மணிக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும் அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை. அந்த கும்பலில் இருந்த ஒருவர், செந்தில்வேலன் சட்டையை பிடித்து இழுத்தார். பதிலுக்கு செந்தில்வேலன் கையை ஓங்கினார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், பதட்டம் ஏற்பட்டு பின் கலவரமாக மாறியது. இதில் சிதறி ஓடிய சிலர் பரமக்குடி டி.எஸ்.பி., கணேசனை கீழே தள்ளிவிட்டனர். விழுந்த அவர் தலை மீது ஒரு கும்பல் பெரிய கல்லை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. தலையில் காயமடைந்த கணேசனை, அங்கிருந்த போலீசார் பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். பல இடங்களில் இருந்து பலர் கற்களை வீசியதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப்மிட்டல், எஸ்.பி., செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர். காயத்தால் சுயநினைவை இழந்த சந்தீப் மிட்டல் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலவரம் பெரிதாகியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம் கொண்டுவந்தனர். கலவரக்காரர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்ததால், அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். சிதறி ஓடிய கும்பல், பல இடங்களில் இருந்து போலீசார் மீது கற்களை வீசியதுடன், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் பலியாயினர். இவர்கள் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.