/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தகட்டில் கட்சி சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரம்தகட்டில் கட்சி சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரம்
தகட்டில் கட்சி சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரம்
தகட்டில் கட்சி சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரம்
தகட்டில் கட்சி சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 04, 2011 12:06 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் தேர்தலை முன்னிட்டு அரசியல், சுயேச்சை கட்சி சின்னங்களை தகட்டில் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் கலாய் தகடுகள் மூலம் இரும்பு பெட்டிகள், கட்டட தளவாட பொருட்கள் உள்ளிட்டவைகள் தயார் செய்து வருகின்றனர்.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அரசியல் மற்றும் சுயேட்சை கட்சியினர் தீவிர ஓட்டு கேட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்.,- தே.மு.தி.க., வேட்பாளர்கள் தங்களது அரசியல் கட்சி சின்னங்களை சுவர்களில் பெயிண்ட் மூலம் வரைவதற்காக தகடுகளில் சின்னங்கள் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தங்களது சின்னத்தை வரைந்து தகட்டில் வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ளனர்.


