ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் பாரி, அஞ்சான் ஆகியோர் முன்னிலையில் என். எஸ்.எஸ்., மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஆசிரியர் முத்துக்குமார் செய்திருந்தார்.