/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணைமுந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
கடலூர் : ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போனவர் நெய்வேலி அருகே அரசு முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஊமங்கலம் அடுத்த தெற்கிருப்பு அரசு முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தைப் பார்த்த அப்பகுதியில் ஆடுமாடு மேய்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் இறந்து கிடப்பது தனசேகரன் தானா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி சகுந்தலா மற்றும் சகோதரர் சிவானந்தம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இருவரும், இறந்து கிடந்தவர் அணிந் திருந்த உடை மற்றும் செருப்பை அடை யாளம் கண்டு இறந்தது தனசேகரன் தான் என்பதை உறுதி செய்தனர். உடல் அழுகி முற்றிலும் சேதம டைந்து இருப்பதால் தனசேகரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது இறப்புக்கு வேறு காரணமா என தெரிய வில்லை. மேலும் முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக தன சேகரன் கொலை செய்யப்பட்டுள்ளாரா என ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.