ADDED : செப் 01, 2011 11:29 PM
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் புகழி மலை ஸ்ரீ பாலசுப்ரமணி ஸ்வாமி கோவிலில் அரசு வேம்புக்கு திருமண விழா நடந்தது.
புகழி மலை அடிவாரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள மரங்களுக்கு எல்லாம் ராஜா என போற்றப்படும் அரசுவுக்கும், வேம்பரசி என போற்றப்படும் வேம்புக்கும், பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புதிய பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுமங்கலி அம்சமான திருமஞ்சள் வளையல் குங்குமம் அணிவித்து நேற்று தெய்வீக திருமண விழா நடத்தப்பட்டது. மஹா தீபாராதனைக்கு பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மன் சுய உதவிக்குழு மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.