அமெரிக்கா - வடகொரியா அணுசக்தி பேச்சு
அமெரிக்கா - வடகொரியா அணுசக்தி பேச்சு
அமெரிக்கா - வடகொரியா அணுசக்தி பேச்சு
ADDED : ஜூலை 25, 2011 09:42 PM
ஹாங்காங்: 'வடகொரியா தனது அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்,' எனும் சர்வதேச பேரங்களுக்கு இடையே, அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அடுத்த சில நாட்களில் அமெரிக்கா செல்கிறார்.
இதன் மூலம், வடகொரியாவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் புதிய துவக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, இருநாடுகளுக்கும் இடையில் நடந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை 2008ல் முறிவடைந்தது.