ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு
ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு
ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு

தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்:சென்னை கலெக்டர் எங்கிருந்தோ செலுத்தப்பட்ட செல்வாக்கிற்கும், நெருக்கடிகளுக்கும் பணிந்து, அரசு வழக்கறிஞரின் கருத்துரையை ஒப்புக்காகப் பெற்று, தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள 4 காணி, 18 கிரவுண்ட், 1,683 சதுர அடி நிலம் தோட்டக்கலைச் சங்கத்திற்கே உரியது என்று அ.தி.மு.க., ஆட்சியிலே உத்தரவிட்டுள்ளார்.நிரந்தர நிலப்பதிவேட்டில் இந்த நிலம் அரசு நிலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கலெக்டர் மூலமாக அந்த இடம் அரசுக்குச் சொந்தமானதல்ல என்று கூறச் செய்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்க்க, ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க., ஆட்சியினர் செய்துள்ள இந்தப் பெரிய ஊழலை வெளிப்படுத்தியிருக்கிறேன்.இத்தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமேயானால், ஊழல்கள் தொடர வழி பிறக்கும். சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில், 200 கோடி ரூபாய்க்கும் குறைவில்லாத மதிப்புடைய அரசு நிலம் அ.தி.மு.க., ஆட்சியாளர்களின் ஆசிகளோடும், அதிகாரிகளின் துணையோடும் அபகரிக்கப்படும் அநீதியை நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


