/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போலி டீ தூள் விற்பனை கட்டுப்படுத்த கோரிக்கைபோலி டீ தூள் விற்பனை கட்டுப்படுத்த கோரிக்கை
போலி டீ தூள் விற்பனை கட்டுப்படுத்த கோரிக்கை
போலி டீ தூள் விற்பனை கட்டுப்படுத்த கோரிக்கை
போலி டீ தூள் விற்பனை கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2011 01:40 AM
பள்ளிபாளையம்: போலி டீ தூள் விற்பனையை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள டீ கடைகளில், சில கடைகளில் போலி டீ தூளை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அத்தகைய டீ தூளில் தயாரிக்கப்படும் டீயை, குடிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கலப்பட டீ தூள் கலந்த டீயை குடிப்பவர்களுக்கு பற்களில் கரை படிவதுடன், குடல் சம்பந்தமான நோயும் தாக்கும் அபாயம் உள்ளது. அசல் டீ தூள் போல் இருப்பதால், போலியை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சுகாதார ஆய்வாளர்கள் டீ கடைகளில் நேரில் ஆய்வு செய்து, போலி டீ தூள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.