Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

Latest Tamil News
லக்னோ; உ.பி.யில் ரீல்ஸ் எடுக்க,வாலிபர் ஒருவர் ரயிலில் தொஙகியபடி பயணித்த வீடியோ வைரலாகி உள்ளது.

உ.பி.யில், கஸ்கஞ்ச்-கான்பூர் இடையே ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் ஒரு பெட்டியின் வெளியே ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வாலிபர் தொங்கியபடி இருந்தார்.

ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சித்து எதிர்பாராத விதமாக தொங்கியபடி தவிப்பதாக உள்ளே இருந்த பயணிகள் நினைத்தனர். அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று அவர்கள் எத்தனித்தனர்.

சில நிமிடங்கள் கடந்த போதும், அந்த வாலிபர் அப்படியே தொங்கியபடி இருந்தார். குழப்பம் அடைந்தவாறு அவர்கள் யோசிக்க, அதன்பிறகே ரீல்ஸ் எடுக்க இப்படி வீடியோ எடுக்கப்படுகிறது என்பதை அறிந்தனர்.

சில கி.மீ., தூரம் வரை தொங்கியவாறு வந்த அந்த வாலிபர், ரயில் மெதுவாக ஓரிடத்தில் நின்றது. அடுத்த நொடியே கைகளை விடுவித்து, ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டு கீழே விழுந்தார். பின்னர் மீண்டும் அதே ரயிலில் ஏறி பயணித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us