Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மகன் கொடுமை தாங்க முடியாத தாய்:தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

மகன் கொடுமை தாங்க முடியாத தாய்:தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

மகன் கொடுமை தாங்க முடியாத தாய்:தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

மகன் கொடுமை தாங்க முடியாத தாய்:தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ADDED : செப் 15, 2011 11:41 PM


Google News

சென்னை:மகன் கொடுமைபடுத்திய புகார் தொடர்பாக, உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வேலம்மாள், 53.

இவரது மகன் சவுந்தர்ராஜன், 35. கடந்த சில மாதங்களாகவே, சவுந்தர்ராஜன் தன் தாய் வேலம்மாளுக்கு, சரியாக உணவு கொடுக்காமல், அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக, வியாசர்பாடி போலீசில் வேலம்மாள் கொடுத்த புகாரை வாங்கிய போலீசார், நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை போலீஸ் நிலையத்திற்குச் சென்றும் நடவடிக்கை இல்லாததால், நேற்று முன்தினம், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளிப்பதற்காக, எழும்பூர் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார் வேலம்மாள்.

கமிஷனரை சந்தித்து மனு அளித்து விட்டு, அங்கிருந்த போலீசாரிடம் மயக்கம் வருவதாக கூறியுள்ளார். போலீசார், உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



டாக்டர்கள் பரிசோதித்த போது, 50 மாத்திரைகள் சாப்பிட்டதாகவும், கமிஷனரிடம் மனு கொடுத்துவிட்டு உயிரை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட வேலம்மாள், தற்போது, கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us