நிலத்தகராறில் கலவரம் : 9 பேர் சுட்டுக்கொலை
நிலத்தகராறில் கலவரம் : 9 பேர் சுட்டுக்கொலை
நிலத்தகராறில் கலவரம் : 9 பேர் சுட்டுக்கொலை
UPDATED : செப் 15, 2011 12:53 PM
ADDED : செப் 15, 2011 10:02 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மயானத்திற்கான இடம் பிடிப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறில் இருபிரிவினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி்ச்சூட்டில் 9 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர், கோபால்கர்க் எனும் இருமாவட்டங்களுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய கிராமம் உள்ளது. இங்கு அரசு நிலத்தில் ஒரு பிரிவினர் மயானம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் குளம் வெட்டி தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருபிரிவினரிடையே நேற்று சமாதான கூட்டம் பரத்பூரில் ஊர் பெரியவர்கள் மற்றும் போலீசார் முன்பு நடந்துள்ளது. இதில் தீர்வு எட்டப்படாமல் போகவே, திடீர் வன்முறை ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியும், துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டதில் 9 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். பரத்பூரில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை குறித்து முதல்வர் அசோக்கெலாட் உத்தரவின் பேரில் அரசு உயரதிகாரிகள் பரத்பூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.