Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பேப்-இந்தியா நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

புதுச்சேரி பேப்-இந்தியா நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

புதுச்சேரி பேப்-இந்தியா நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

புதுச்சேரி பேப்-இந்தியா நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

ADDED : ஆக 01, 2011 02:38 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி பேப்-இந்தியா நிறுவனத்திலிருந்து குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதியை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.பேப்-இந்திய நிறுவனம் உலக அளவில் இந்தியா உள்பட 33 நாடுகளில் ஷாப்பிங் வசதியைக் கொண்டுள்ளது.

இங்கு பொருட்களை வாங்கும் உள்ளுர், வெளியூர் பயணிகளின் வசதிக்காக பேப்-இந்தியா நிறுவனம், இந்திய அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது.இதன்படி இந்தியா பேப்-இந்தியா நிறுவன கிளைகளில் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் பார்சல் வசதிக்காக இந்திய அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் திட்ட துவக்க விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதி பேப்-இந்தியா அலுவலகம் எதிரில் நடந்தது.



சென்னை மண்டல இந்திய அஞ்சல் தலைவர் ராமானுஜம் வரவேற்றார். தமிழ்நாடு வட்டம் தலைமை அஞசல் துறை தலைவர் சாந்தி நாயர் தலைமை தாங்கினார். டில்லி இந்திய அஞ்சல் வாரிய திட்டக்குழு உறுப்பினர் சுனிதா திரிவேதி சிறப்புரையாற்றி திட்டத்தைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேப்-இந்தியா தகவல் மற்றும் பொதுநல தலைவர் பிராப்ளின் சப்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த சேவை மூலம் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கும் குறைந்த செலவில் பொருட்களைப் பாதுகாப்பாக பார்சல் அனுப்ப முடியும்.பார்சல் கட்டணம் எவ்வளவு: உள்ளூர்களுக்கு பார்சல் அனுப்ப ஒரு கிலோவிற்கு 125 ரூபாய். 2.5 கிலோவிற்கு 200 ரூபாய், 5 கிலோவிற்கு 400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு பார்சல் அனுப்ப ஒரு கிலோவிற்கு 1000 ரூபாய். 2.5 கிலோவிற்கு 1,500 ரூபாய், 5 கிலோவிற்கு 2,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறந்திருக்கும். மேலும் விபரங்களுக்கு 0413-2226010, 4200797 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us