செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் சோனியா
செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் சோனியா
செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் சோனியா
UPDATED : செப் 25, 2011 10:32 PM
ADDED : செப் 25, 2011 10:26 PM
லண்டன் :உலகின் அதிக செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.பிரிட்டனைச் சேர்ந்த, 'நியூஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகை, உலகில் அதிக செல்வாக்குமிக்க மனிதர்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
பின்னர், உலகில் அதிக செல்வாக்குமிக்க 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சல் மெர்கெல் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சோனியாவை, 'மேடம் இந்தியா' என்று அப்பத்திரிகை வர்ணித்துள்ளது.மேலும், ' இந்தாலியில் பிறந்த சோனியா, இந்தியாவின் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக திகழ்கிறார். நான்காவது முறையாக காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா, இந்திய முன்னாள் பிரதமர் இந்திராவின் மருமகள்' என்று சோனியாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா, பாகிஸ்தான் ராணுவ தலைவர் அஸ்பாக் பர்வேஸ் கயானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.