சேலம் மேயர் பதவி பொது பிரிவாக மாற்றம்
சேலம் மேயர் பதவி பொது பிரிவாக மாற்றம்
சேலம் மேயர் பதவி பொது பிரிவாக மாற்றம்
ADDED : செப் 22, 2011 01:57 AM
சேலம்: கடந்த உள்ளாட்சி தேர்தலில், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட
சேலம் மாநகராட்சி மேயர் பதவி, தற்போது பொது பிரிவாக மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி விதிகளின்படி, 10 ஆண்டுக்கு ஒரு முறை
உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள், சுழற்சி முறையில் மாற்றப்படும். கடந்த
2001ம் ஆண்டு, மாநகராட்சியில், ஒன்று, 10, 11, 15, 16, 18, 21, 25, 28, 36,
39, 40, 46, 49, 52, 54, 56, 58 ஆகியவை பெண்கள் போட்டியிடும் வார்டுகளாக
இருந்தது. கடந்த 2006ம் ஆண்டு, வார்டு எண் ஐந்து, 14, 19, 23, 26, 27, 29,
31, 32, 35, 41, 42, 48, 53, 55, 57, 60 ஆகியவை, பெண்கள் போட்டியிடும்
வார்டாகவும், 12, 22, 44, ஆகியவை தாழ்த்தப்பட்ட பெண்கள் வார்டாகவும்
மாற்றப்பட்டது. வார்டு எண் 4,13, 20, 47 ஆகியவை தாழ்த்தப்பட்டோர்(பொது)
போட்டியிடும் வார்டுகளாக மாற்றப்பட்டது.
கடந்த 2006 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், கவுன்சிலர்கள் சேர்ந்து மேயரை
தேர்வு செய்யும் முறை பின்பற்றப்பட்டது. வரும் தேர்தலில், வார்டு
கவுன்சிலரை போல, மேயரும் நேரடியாக பொதுமக்களால், தேர்ந்தெடுக்கப்படும்
நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.சேலம் அ.தி.மு.க., மேயர் வேட்பாளராக பொதுப்
பிரிவை சேர்ந்த சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டார். எனவே, சேலம் மாநகராட்சி
பொதுப் பிரிவாக மாற்றம் அடைவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தமிழக தேர்தல்
ஆணையத்திடம் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. அரசியல் கட்சியினர்,
பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று, சேலம்
மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதாக, அதிகாரபூர்வ
அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேலூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த பெண்களுக்கும், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி ஆகிய
மாநகராட்சிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.சேலம்
மாநகராட்சியில், கடந்த 2006 தேர்தலில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட
வார்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. துணை மேயர், மண்டல குழு
தலைவர் ஆகிய பதவிகள் வழக்கம் போல, மாநகராட்சி கவுன்சிலர்கள் மூலம் தேர்வு
செய்யப்பட உள்ளது.


