Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ரேஷன் கடையில் கூடுதல் கார்டுகளால் பொதுமக்கள் அவதி

ரேஷன் கடையில் கூடுதல் கார்டுகளால் பொதுமக்கள் அவதி

ரேஷன் கடையில் கூடுதல் கார்டுகளால் பொதுமக்கள் அவதி

ரேஷன் கடையில் கூடுதல் கார்டுகளால் பொதுமக்கள் அவதி

ADDED : செப் 22, 2011 12:40 AM


Google News
தென்காசி : தென்காசி வடக்கு ஒப்பணை தெரு ரேஷன் கடையில் கூடுதல் ரேஷன் கார்டுகளால் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

தென்காசி 15வது வார்டு வடக்கு ஒப்பணை தெருவில் வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பெருத்த சிரமங்களுக்கிடையே பொது வினியோக அத்யாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த கடைக்கு கூடுதல் குடும்ப அட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. முழுமையாக அத்யாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. கடைக்கு வெகு தூரத்திலுள்ள ஆபாத்து பள்ளிவாசல் தெரு, மலையான் தெரு, சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, உடையார் தெரு, செங்குந்தர் தெரு போன்ற பகுதியிலுள்ள பொதுமக்கள் இங்கு வந்துதான் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக உள்ள குடும்ப அட்டைதாரர்களை குறைவான கார்டுகள் உள்ள மாலிக் காம்பவுண்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு ரேஷன் கடையுடன் சேர்த்தால் இக்கடையில் கூட்டமும் குறையும், பொதுமக்களும் எவ்வித சிரமமுமின்றி அனைத்து பொருட்களும் வாங்கி பயனடைவர். எனவே பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us