ADDED : அக் 03, 2011 12:06 AM
மதுரை:மதுரையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மேயர் வேட்பாளர் கவியரசு மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை மற்றும் மகபூப்பாளையம் ஜின்னா திடலில், தேர்தல் அலுவலரின் முத்திரை இல்லாத வாகனத்திலும், விதிமுறை மீறி ஐந்திற்கும் மேற்பட்ட கார்களிலும் வந்து பிரசாரம் செய்தார்.
இதுதொடர்பாக பிரேமலதா, கவியரசு, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தரராஜன், ராஜா ஆகியோர் மீது திலகர்திடல், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


