Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/எத்தனை வார்டுகளுடன் மாநகராட்சித்தேர்தல்?தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; கமிஷனர் மழுப்பல்

எத்தனை வார்டுகளுடன் மாநகராட்சித்தேர்தல்?தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; கமிஷனர் மழுப்பல்

எத்தனை வார்டுகளுடன் மாநகராட்சித்தேர்தல்?தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; கமிஷனர் மழுப்பல்

எத்தனை வார்டுகளுடன் மாநகராட்சித்தேர்தல்?தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; கமிஷனர் மழுப்பல்

ADDED : செப் 13, 2011 01:04 AM


Google News
திருச்சி: உள்ளாட்சித்தேர்தலுக்கு எந்தெந்த பகுதியில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அவசரக்கூட்டம் திருச்சி மாநரகாட்சியில் நேற்று மாலை நடந்தது.

திருச்சி மாநகராட்சிக்கு 60 வார்டில் தேர்தல் நடக்குமா? 65 வார்டில் தேர்தல் நடக்குமா? என கமிஷனர் தெரிவிக்காததால், குழப்பம் நீடிக்கிறது. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நன்னநடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் கமிஷன் அனுமதியோடு உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த பகுதியில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அவசரக்கூட்டம் திருச்சி மாநகராட்சியில்,நேற்று மாலை நடந்தது. வழக்கம்போலவே மாலை 4.30 மணிக்கு நடைபெற வேண்டிய கூட்டம் 5 மணிக்கு தாமதமாக துவங்கியது. மேயர் சுஜாதா தலைமை வகித்து, புதிய கமிஷனர் வீரராகவராவ் மற்றும் பி.ஆர்.ஓ., மருதப்பிள்ளை ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். தமிழக தேர்தல் கமிஷன் செயலர் கடித எண்படி திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு ஓட்டுச்சாவடிப் பட்டியல்கள் தயாரித்து, அதை மாநகராட்சி கூட்டத்தில் வைத்து கலந்தாலோசிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் 2011க்கு திருச்சி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளுக்கு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் தயாரித்து மாமன்ற பார்வை, ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்கனவே 2006ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தலுக்கும் நடைபெற்ற ஓட்டுச்சாவடிகளையே 2011ம் ஆண்டுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. காலி செய்யப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு அருகில் உள்ள புதிய பள்ளி கட்டிடங்கள் மாற்று ஏற்பாடாக தேர்வு செய்தும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலுக்கு மாமன்றம் ஒப்புதல் அளித்தது. மேயர் சுஜாதா பேசுகையில், ''தேர்தல் நன்னடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால், தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும். வேறு ஏதும் பேசக் கூடாது. நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஒத்துழைப்பு நல்கிய மக்கள், கமிஷனர், துணைமேயர், கவுன்சிலர்கள், மாநரகாட்சி அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். அனைத்து கவுன்சிலர்களும், '60 வார்டுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறதா? அல்லது 65 வார்டுகளுக்கு நடக்கிறதா? அப்படியானால், வார்டுகளில் மாற்றம் ஏற்படுமா? மேயர் பதவி பொதுவா? பெண்களுக்கா? என்பதை கமிஷனர் விளக்க வேண்டும்'' எனக் கேட்டனர்.கமிஷனர் வீர ராகவ ராவ் பேசியதாவது:மாநில தேர்தல் கமிஷன் விதிகளின்படி 2 கி.மீ.,க்குள் ஓட்டுச்சாவடிகள் (பூத்) இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின், மாநில தேர்தல் கமிஷன் ஆலோசனை பெற்று மாற்றப்படும். வார்டுகள் தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது ஏதும் சொல்ல முடியாது. 60 வார்டா? அல்லது 65 வார்டா என்பது பிறகு தான் தெரியும். தேர்தல் கமிஷன் என்ன உத்தரவிடுகிறதோ, அத்தனை வார்டுகளுக்கு தேர்தல் நடக்கும். அதன்பின், கமிஷன் அனுமதிபெற்று மாநகராட்சி கூட்டம் நடத்தியோ அல்லது அனைத்து கட்சி கூட்டத்திலோ வார்டுகள் குறித்து தெரிவிக்கப்படும். கவுன்சிலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், எழுத்துப்பூர்வமாக கேட்கலாம். அதற்கு தகுந்த பதிலளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். எதிர்கட்சி தலைவர் 'மிஸ்சிங்': திருச்சி மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த சீனிவாசன் நேற்று நடந்த கூட்டத்துக்கு வரவில்லை. கேபிள் 'டிவி' தொடர்பான சர்ச்சையில் அவர் சிக்கியதால், கூட்டத்துக்கு வருவதை அவர் தவிர்த்துவிட்டதாக தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us