அடிப்படை வசதி கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 23, 2011 11:45 AM
மேட்டுப்பாளையம்: ரேசன்கார்டு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தாசில்தார் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் உக்கான்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், சுகாதாரம், ரேசன்கார்டுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் தற்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.