/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூகாம்பிகை கோவில் பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்புமூகாம்பிகை கோவில் பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
மூகாம்பிகை கோவில் பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
மூகாம்பிகை கோவில் பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
மூகாம்பிகை கோவில் பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : மூகாம்பிகை கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
என்.ஆர். காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் மதியம் மனுத் தாக்கல் செய்தார். இதில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தனது நெருங்கிய நண்பர்கள் கோகுலகிருஷ்ணன், பழனி உள்ளிட்டோருடன் உடனடியாக சேலம் புறப்பட்டார். சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் மடத்தில் நடந்த பூஜையில் முதல்வர் பங்கேற்றார். சேலத்தில் இருந்து கொல்லூருக்கு முதல்வர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார். மூகாம்பிகை கோவிலில் நேற்று மாலை, அமாவாசை முடிந்து பாட்டிமை பிறகும் நேரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.புதுச்சேரிக்கு இன்று திரும்பும் முதல்வர் ரங்கசாமி, என்.ஆர். காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து இன்று மாலை பிரசாரத்தை துவக்குகிறார்.