பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : கும்பகோணம் அருகே பரபரப்பு
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : கும்பகோணம் அருகே பரபரப்பு
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : கும்பகோணம் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 13, 2011 01:39 AM
கும்பகோணம் : கும்பகோணம் அருகே, பள்ளி ஒன்றிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விடுமுறை விடப்பட்டது.
சோதனையில், வெறும் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரயில்வே ரோட்டில், ரைஸ்சிட்டி மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, மொபைல்போனிலிருந்து பள்ளிக்கு பேசிய மர்ம நபர், 'காலை 9 மணிக்குள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும்' என்று, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய் உதவியுடன், பள்ளி முழுவதும் சோதனை செய்தும், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது, வெறும் புரளி என தெரிய வந்ததையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, ஆடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.