/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சியில் கோவில் அறங்காவலர்கள் ராஜினாமா : புதிய நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவுபொள்ளாச்சியில் கோவில் அறங்காவலர்கள் ராஜினாமா : புதிய நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவு
பொள்ளாச்சியில் கோவில் அறங்காவலர்கள் ராஜினாமா : புதிய நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவு
பொள்ளாச்சியில் கோவில் அறங்காவலர்கள் ராஜினாமா : புதிய நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவு
பொள்ளாச்சியில் கோவில் அறங்காவலர்கள் ராஜினாமா : புதிய நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவு
ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கோவில்களில் உள்ள அறங்காவலர் குழுவினர் ராஜினாமா செய்து வருகின்றனர்.
ராஜினாமா குறித்து அரசுக்கு தெரிவித்து புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், 36 ஆயிரத்து 425 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இக்கோவில்களின் ஆண்டு வருமானத்தை பொறுத்து உதவி ஆணையர், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என நான்கு நிலைகளில் கோவில்கள் பிரிக்கப்பட்டு செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில்களில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முக்கிய கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் கோவில்களில் அறங்காவலர்களாக இருந்தனர்.தற்போது, சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., அரசு பதவியேற்றுள்ளதால், பல கோவில்களின் அறங்காவலர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர். பொள்ளாச்சி தாலுகாவில் பல கோவில்களின் அறங்காவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், அர்த்தநாரிபாளையம் அழகு திருமலைராய பெருமாள் சுவாமி கோவில், வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கோட்டூர் மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு மாகாளியம்மன் கோவில், கோட்டூர் ஜல்லி வீரம்மன் கோவில், பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ஜீப்ளிகிணறு வீதி விநாயகர் கோவில், மகாலிங்கபுரம் ஆதி சக்தி விநாயகர் கோவில், அய்யப்பன் சுவாமி கோவில், சீதா ராமர் மற்றும் ராகவேந்திரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆகிய 12 கோவில்களில் அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், கரிவரதராஜ பெருமாள் கோவில் தவிர மற்ற கோவில்களிலுள்ள அறங்காவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அறங்காவலர்கள் ராஜினாமா செய்த கோவில்களிலுள்ள செயல் அலுவலர்கள் மற்றும் தக்கார் ஆகியோர் கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகின்றனர். இக்கோவில்களுக்கு விரைவில் புதிய அறங்காவலர் குழுவினரை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். 'அறிவிப்பு வெளியானவுடன் விண்ணப்பிக்கலாம்' இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி தாலுகாவில் பல கோவில்
களில் அறங்காவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அறங்காவலர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், பல கோவில்களுக்கு விரைவில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு வெளியானவுடன், அறங்காவலராக இருக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் வழங்கினால், தகுதியானவர்கள் குறித்து பரிசீலனை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அரசின் அறிவுறுத்தலின்படி புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர், என்றனர்.