ADDED : அக் 07, 2011 12:58 AM
ஈரோடு: மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி,
கோவையில் நாளை துவங்குகிறது.கோவை 'ஜென்னி கிளப்' நீச்சல் குளத்தில்
போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில், ஈரோடு நீச்சல் குளத்தில் பயிற்சி
பெற்று வரும், நீத்தின்விஸ்ரம், செங்கோட்டையன், கார்த்திக் ஆகியோர் மூன்று
பேர் தேர்வு செய்யப்பட்டு, பங்கேற்க உள்ளனர் என, நீச்சல் பயிற்சியாளர்
மகேந்திரன் தெரிவித்தார்.


