/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாரதி நகர் கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு மனுபாரதி நகர் கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு மனு
பாரதி நகர் கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு மனு
பாரதி நகர் கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு மனு
பாரதி நகர் கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு மனு
ADDED : அக் 07, 2011 12:47 AM
கோத்தகிரி : 'கோத்தகிரி பாரதிநகர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள்
ஏற்படுத்தி தரவேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து
தே.மு.தி.க., மாவட்ட பிரதிநிதி சபாரத்தினம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பியுள்ள மனு: கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு
உட்பட்ட பாரதிநகரில் 60 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
பெரும்பாலும் கூலிவேலை செய்துவரும் கிராம மக்களில் 30 குடும்பங்களுக்கு
இது வரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. மேலும், கிராமத்திற்கு
செல்லும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ள நிலையில், போதிய குடிநீர் வசதி
இல்லாமல் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து பலமுறை
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறைகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு சபாரத்தினம்
கூறியுள்ளார்.


