Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு

வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு

வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு

வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு

ADDED : செப் 20, 2011 11:46 PM


Google News

பெரம்பலூர்: வெளிமாநிலங்களுக்கு டூர் செல்லும் விவசாயிகளின் பஸ்சை பெரம்பலூர் டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக 100 விவசாயிகள் கொண்ட குழு தோட்டக்கலைத்துறை மூலமாக பஸ் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனர். இக்குழு விவசாயிகளுக்கு ஒரு வார காலம் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் சாகுபடி முறைகள், நோய்த்தாக்கம், தடுப்புமுறை, உற்பத்தி பெருக்கம், நீர்பாசன முறைகள் குறித்து பயிற்சிகள், விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இக்குழுவினர் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் வாழையின் மகசூல் பெருக்குதல் மற்றும் வாழை அடர்நடவு ஆகிய தொழில்நுட்பங்களையும், அருப்புக்கோட்டையில் உள்ள மண்டல தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி பழப்பயிர்கள் சாகுபடி முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.



கோவில்பட்டியிலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி மிளகாய், மருத்துவ பயிர்கள் சாகுபடி முறை குறித்தும், குற்றாலத்திலுள்ள பழப்பண்ணை மற்றும் பூச்செடிகள், அலங்கார செடிகள் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்படும்.கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கிழங்கு வகை ஆராய்ச்சி நிலையத்திற்கும், பீச்சியில் உள்ள கேரளா வன ஆராய்ச்சி நிலையத்திற்கும், வேலு பாடத்திலுள்ள மூங்கில் ஆராய்ச்சி யைத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். திருச்சூர் வேளாண் கல்லூரி மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் உடுமலைபேட்டையில் உள்ள ஜெயின் பண்ணையில் மா அடர்நடவு, புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



இதற்காக விவசாயிகளுடன் தோட்டக்கலை அலுவலர்கள் ஆனந்தன், துரை மற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் உடன் செல்கின்றனர். விவசாயிகளுக்கான இப்பயிற்சி சுற்றுலாவிற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் செல்லும் பஸ் பயணத்தை டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சௌந்தரராஜன், உதவி இயக்குநர் நலங்கிள்ளி, தேன்மொழி மற்றும் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us