ADDED : செப் 08, 2011 12:08 AM
மணப்பாறை: மணப்பாறை சரண் கல்வி ஊரக வளர்ச்சி சங்கம், சரண் தொண்டு நிறுவனம்
மற்றும் திருச்சி பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவிந்தராஜன் கண்
மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சாம்பட்டியில்
நடந்தது.சாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவன செயலாளர்
மலைக்கொழுந்தன் வரவேற்றார். தன்னார்வ சேவை நிறுவன திட்ட ஆலோசகர்
பாலகிருஷ்ணன், கோவிந்தராஜன் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்
அழகுதேவர், டாக்டர் சரவணன், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன்
பேசினார்கள்.முகாமில், மருத்துவக்குழுவினர் 560 பேருக்கு கண் பரிசோதனை
செய்து மருந்து மாத்திரைவழங்கினர். தொண்டு நிறுவன சேர்மன் செல்வி,
பொருளாளர் பெரியசாமி பங்கேற்றனர்.