Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கண்தான விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

கண்தான விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

கண்தான விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

கண்தான விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

ADDED : செப் 27, 2011 12:03 AM


Google News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாஸ்கரன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

26வது தேசிய இருவார கண்தான விழா முன்னிட்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை தஞ்சையில் நடந்தது. கண் தானம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் தஞ்சாவூர் வீரராகவ மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவன் இனியன் முதலிடம் பெற்றமைக்காக ரூபாய் மூன்றாயிரம், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஜிதா இரண்டாம் இடம் பெற்றமைக்காக ரூபாய் இரண்டாயிரம், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஹரிதன்வந்திரி மூன்றாம் இடம் பெற்றமைக்காக ரூபாய் ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.



தஞ்சாவூர் பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி உமாமகேஸ்வரி, கும்பகோணம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி நிவேதிதா, அம்மாப்பேட்டை ரெசீனா சீலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி காவியா, அவணியாபுரம் கிரசென்ட் மேல்நிலைப்பள்ளி பள்ளி பிளஸ் 2 மாணவி ரஃபீலா பர்வீன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார். இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் 57வது போட்டிகளில் ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடக்க உள்ளது. இப்போட்டிக்காக தமிழ்நாடு அணிக்காக தேர்வு போட்டிகள் அண்மையில் தர்மபுரியில் நடந்தது. இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இரந்து 150 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் அவணியாபுரம் கிரசென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகபரியா தமிழக பள்ளி அணிக்கு தேர்வு பெற்று தேசிய வாலிபால் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை புரிந்து மாணவி சண்முபிரியாவை கலெக்டர் பாஸ்கரன் பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சாந்தமூர்த்தி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் கிரிதர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், கிரசென்ட் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாகுல்அமீது, உதவி தலைமை ஆசிரியர் செல்வசேகரகன் உட்பட பலர் பல்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us