நீட் தேர்வு; கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியீடு
நீட் தேர்வு; கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியீடு
நீட் தேர்வு; கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 25, 2024 05:10 PM

புதுடில்லி: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். தேர்வில் 1,563 பேருக்கு கருணைப் மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையானது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜூலை 20ம் தேதி தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இன்று (ஜூலை 25) கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 19ம் கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.