/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சிதனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 23, 2011 10:00 PM
உடுமலை : உடுமலையில், விதை சான்று துறை சார்பில் இரண்டு மாவட்ட தனியார்
விதை உற்பத்தியாளர்களுக்கு விதை சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி
அளிக்கப்பட்டது.
விதை சான்று அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். விதை ஆய்வு
இணை இயக்குனர் கோபால் பேசியதாவது: நெல் மட்டுமல்லாது பயிறு, சிறுதானியம்,
எண்ணெய் வித்து மற்றும் காய்கறி பயிர்களிலும் விதைப்பண்ணைகள் அமைத்து
சான்று விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். விதை ஆய்வு துணை
இயக்குநர் பொன்னுசாமி நடேசன், விதை உற்பத்தியாளர்கள் அனைவரும் விதைகள்
இருப்பு பதிவேட்டை முறையாக பராமரித்து வர வேண்டும். விதைகளை விற்பனை
செய்யும் போது குவியல் எண், காலாவதி நாள் போன்ற விவரங்களை குறிப்பிட்டு
விவசாயிகளின் கையெழுத்தையும் விற்பனை பட்டியலில் பெற வேண்டும் என்றார்.
விதை சான்று உதவி இயக்குநர் மோகன்ராஜ் சாமுவேல், அதிகபட்ச முளைப்புத்திறன்,
புறச்சுத்தம் மற்றும் இனத்தூய்மை மிக்க தரமான விதைகளை உற்பத்தி செய்திட
விதை உற்பத்தியாளர்கள் பாடுபட வேண்டும். விதை சான்றளிப்பின் கீழ் அதிகளவு
பரப்பில் விதைப்பண்ணைகளை பதிவு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் சான்று
பெற்ற விதைகளை வினியோகம் செய்ய தனியார் விதை உற்பத்தியாளர்கள் முன் வர
வேண்டும் என்றார். விதை சான்று இயக்குனரக விதை சான்று
அலுவலர்(தொழில்நுட்பம்) சுரேஷ்குமார் விதை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும்
பிரச்னைகளை கண்டறிந்து விதை உற்பத்தி பணிகள் தடங்கல் இல்லாமல் நடக்க விதை
சான்று இயக்ககம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது', என பேசினார். விதை
சான்று அலுவலர்(தொழில்நுட்பம்)பெருமாள்சாமி, விதை சுத்திகரிப்பு நிலைய
பணிகள் குறித்து உதயகுமார், சான்று அட்டை பொருத்தும் பணி மற்றும் திறனாய்வு
பணிகள் குறித்து ராஜராம் ஆகியோர் பயிற்சியளித்தனர். விதை உற்பத்தியாளர்
தரணிதரன் நன்றி கூறினார்.