/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., வில் நீக்கப்பட்ட ஜெ., பேரவை செயலாளர்மனைவிக்கு கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனுஅ.தி.மு.க., வில் நீக்கப்பட்ட ஜெ., பேரவை செயலாளர்மனைவிக்கு கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு
அ.தி.மு.க., வில் நீக்கப்பட்ட ஜெ., பேரவை செயலாளர்மனைவிக்கு கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு
அ.தி.மு.க., வில் நீக்கப்பட்ட ஜெ., பேரவை செயலாளர்மனைவிக்கு கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு
அ.தி.மு.க., வில் நீக்கப்பட்ட ஜெ., பேரவை செயலாளர்மனைவிக்கு கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு
ADDED : செப் 22, 2011 01:52 AM
சேலம்: சேலம் மாநகராட்சி 24 வார்டில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட
அ.தி.மு.க., பிரமுகர் சித்தானந்தம், அவரது மனைவிக்கு, சீட் கேட்டு விருப்ப
மனு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் சூரமங்கலம்
மண்டலத்துக்குட்பட்ட, 24 வார்டு பகுதியை சேர்ந்தவர் சித்தானந்தம். இவர்
சூரமங்கலம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
2001-06 ல், 24 வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்வு
செய்யப்பட்டார். புது பஸ் ஸ்டாண்ட், அங்கம்மாள் காலனி, 24 வது
வார்டுக்குட்பட்ட பகுதியாகும். 2001-06 ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி
பொறுப்பில் இருந்ததால், சித்தானந்தம் அடக்கி வாசித்தார்.
கடந்த 2006 ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்றது. சேலம் மாநகராட்சி
தி.மு.க., வசம் ஆனது. மாநகராட்சி, 24 வது வார்டில், பா.ம.க., வை சேர்ந்த
பெரியண்ணன் கவுன்சிலராக வெற்றி பெற்றார். கடந்த ஆட்சியில், தி.மு.க., வை
சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர், மாநகராட்சி பகுதியில் புறம் போக்கு
நிலங்களை வளைத்து போடுவதில் ஆர்வம் காட்டினர்.பல கோடி ரூபாய் மதிப்புள்ள
அங்கம்மாள் காலனி, 24 வது வார்டில் இருப்பது சித்தானந்தத்துக்கு நன்கு
தெரியும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை பார்க்க வேண்டும் என்று
விரும்பியுள்ளார். அங்கம்மாள் காலனி விவகரத்தில் முன்னாள், தி.மு.க.,
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உறுதுணையாக இருந்தார்.நில விவகாரம்
தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
சித்தானந்தம் உள்ளிட்ட, 13 பேர் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. அ.தி.மு.க., வுக்கு களங்கம் ஏற்படுத்தியதால், ஜெயலலிதா,
சித்தனாந்தத்தை கட்சியில் இருந்து நீக்கினார்.சித்தானந்தத்தின் மனைவி
செண்பகவள்ளி, அ.தி.மு.க., வில் வார்டு செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
சித்தானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 24 வது
வார்டில், அ.தி.மு.க., சார்பில் அவரது மனைவி செண்பகவள்ளியை களம் இறக்க
விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர, அ.தி.மு.க., வின் முக்கிய
நிர்வாகிகள் சிலரது ஆலோசனைக்கு ஏற்பவே, சித்தானந்தம், விருப்ப மனு
வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கட்சியில் இருந்த நீக்கப்பட்டவருடன்,
மாநகர், மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மறைமுகமாக தொடர்பு வைத்து கொண்டு,
அவர்களுக்கு சீட் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது, அ.தி.மு.க.,
வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.