Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

தென்காசி : தென்காசியில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அரசு 3 சென்ட் நிலம் வழங்கி வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் இடத்தில் குடியிருந்து வரும் முத்துமாலைபுரம் மக்களுக்கு அவர்களது பெயரில் பட்டா வழங்கிட வேண்டும். பாவூர்சத்திரம் மார்க்கெட் அருகில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.



ஆயிரப்பேரி, பாட்டப்பத்து கிராமங்களில் அரசு தொகுப்பு வீடுகளில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் முருகையா தலைமை வகித்தனர். ஒன்றிய தலைவர் கண்ணன், வட்டார தலைவர் குருசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வள்ளிநாயகம் துவக்க உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மரியதாஸ், முருகையா, மாடசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சி.ஐ.டி.யு.வேல்முருகன், தாணுமூர்த்தி, பால்ராஜ், லெனின்குமார், சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சித்திக், அற்புதமேரி வாழ்த்தி பேசினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில் நிறைவுரையாற்றினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us