/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விஷக்கடி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கைவிஷக்கடி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
விஷக்கடி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
விஷக்கடி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
விஷக்கடி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 16, 2011 12:05 AM
ஓசூர்: 'கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டையில், பாம்பு மற்றும் நாய் கடிக்கு மருந்து வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் சங்க பொது குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் கொடியேற்று விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ஓசூர் அருகே ஒன்னுகுறிக்கையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணப்பா வரவேற்றார். வெங்கடசாமி, ரமேஷ், சிவபிரகாஷ், கோணப்பா, மாரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'கெலவரப்பள்ளி அணை தண்ணீரை, காருகொண்டப்பள்ளி ஏரி வழியாக பட்டாளம்மா ஏரிக்கு கொண்டு வந்து, விவசாய பாசனப்பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் பாம்பு, நாய் கடிகளுக்கு மருந்து இல்லாமல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் பாம்பு, நாய் கடிக்கு மருந்து வழங்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


