Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முன்மாதிரியான நகராட்சியாக மாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்: வைகோ

முன்மாதிரியான நகராட்சியாக மாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்: வைகோ

முன்மாதிரியான நகராட்சியாக மாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்: வைகோ

முன்மாதிரியான நகராட்சியாக மாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்: வைகோ

ADDED : அக் 05, 2011 02:16 AM


Google News
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகராட்சியை தமிழகத்தின் முன்மாதிரியான நகராட்சியாக மாற்றியமைக்க ஆதரவு கொடுங்கள்' ஒன, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் மற்றும் 26 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. சரியான ஆவணங்கள் இருந்தாலும் கட்டட வரைபட அனுமதி பெற லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. கோவை மாநகராட்சியை விட பொள்ளாச்சியில் சொத்துவரி அதிகமாக உள்ளது. இதனால் மக்கள், வர்த்தக நிறுவனத்தினர் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டும் நவீன மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளது. மருத்துவமனைக்கு அருகிலுள்ள நகராட்சி பள்ளி இடத்தை ஒப்படைத்தால், மாவட்ட தலைமை மருத்துவமனை சிறப்பாக அமையும். ஆனால், பள்ளி இடத்தில் வணிக வளாகம் கட்ட தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ம.தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்தால், பள்ளி இடத்தை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பது தான் முதல் தீர்மானமாக இருக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், சாலைகளை புதுப்பித்து மேம்படுத்தவும், சாக்கடை வசதி ஏற்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திட்டச்சாலைகள் அமைக்கவும் ம.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள். பொள்ளாச்சி நகராட்சியை தமிழகத்தின் முன்மாதிரியான நகராட்சியாக மாற்றியமைக்க ஆதரவு கொடுங்கள். இவ்வாறு, வைகோ பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் வரதராஜ், தலைவர் பதவிக்கான வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் வார்டு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். டென்ஷனான வைகோ: வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, கட்சி நிர்வாகிகள் பெயர்களை பட்டியலிட்டு வைகோவிடம் கொடுத்தனர். ஆனால், நிர்வாகிகள் யாருடைய பெயரும் உச்சரிக்காமல் வேட்பாளரையும், சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி வைகோ பேசினார். இறுதியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் பேசும்போது, நிர்வாகிகள் பெயர் கொண்ட நீண்ட பட்டியலை வைகோவிடம் கொடுத்தனர். டென்ஷனான வைகோ யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் உடனடியாக பேச்சை முடித்துக்கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us