ADDED : செப் 18, 2011 10:35 PM
செஞ்சி:லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.அனந்தபுரம்
சப்-இன்ஸ்பெக்டர் அரிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும்
போலீ சார் கடந்த 17ம் தேதி அனந்தபுரம் கடை வீதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த
உமையாள்புரம் ரமேஷ், 45 என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதே போல்
அப்பம்பட்டில் போலி பிராந்தி பாட்டில்கள் விற்பனை செய்த முருகேசன்
என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.