தேனி:தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி
நுண்கலை விழா நிறைவு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்
முறை தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன்
வரவேற்றார்.கலாசங்கமி ஒருங்கிணைப்பாளர் தங்கேஸ்வரி, முதல்வர் சித்ரா,
உறவின் முறை துணை தலைவர் பாலகிருஷ்ணன், கல்லூரி இணை செயலாளர் மகேஸ்வரன்
உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி ஜனனிக்கு மிஸ் கலாசங்கமி 2011 பட்டம்
வழங்கப்பட்டது.