Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.எல்.ஏ., "குத்தாட்டம்' புதுச்சேரியில் பரபரப்பு

எம்.எல்.ஏ., "குத்தாட்டம்' புதுச்சேரியில் பரபரப்பு

எம்.எல்.ஏ., "குத்தாட்டம்' புதுச்சேரியில் பரபரப்பு

எம்.எல்.ஏ., "குத்தாட்டம்' புதுச்சேரியில் பரபரப்பு

ADDED : அக் 10, 2011 03:23 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா நகர் இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து அங்காளன் எம்.எல்.ஏ., டான்ஸ் ஆடி ஓட்டு சேகரித்தார்.இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.

ஆர்.காங்., அ.தி.மு.க., காங்., வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் வாக்காளர்களைக் கவர, கட்சி நிர்வாகிகள் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் பிப்டிக் சேர்மனும், என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,வுமான அங்காளன், தேர்தல் பிரசாரத்தின்போது பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டு, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறார். இவர் எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு, தெருக்கூத்து நாடகங்களில், பல்வேறு வேடங்கள் ஏற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us