/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டி 30 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வுமாவட்டத்தில் 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டி 30 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
மாவட்டத்தில் 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டி 30 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
மாவட்டத்தில் 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டி 30 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
மாவட்டத்தில் 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டி 30 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 04, 2011 11:06 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 223 உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஊராட்சி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 47 மாவட்ட கவுன்சிலர் பத விக்கு 440 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் இறுதியாக 326 பேர் போட்டியிடுகின்றனர். 473 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இறுதியாக 2,656 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் 1099 ஊராட்சித் தலைவர் பதவி இடங்களில் 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 4530 பேர் போட்டியிடுகின்றனர். 8247 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் 765 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 25 ஆயிரத்து 556 பேர் போட்டியிடுகின்றனர்.நகராட்சி: விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நக ராட்சி சேர்மன் பதவிகளுக்கு 56 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 22 பேர் வாபஸ் பெற்றதால் 34 பேர் களத்தில் உள்ளனர். 96 நகராட்சி கவுன் சிலர் பதவி இடங்களுக்கு 715 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இறுதியாக 575 பேர் போட்டியிடுகின்றனர்.பேரூராட்சி: 15 பேரூராட்சி சேர்மன் பதவிகளுக்கு 170 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இறுதியாக 113 பேர் போட்டியிடுகின்றனர். 243 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு, 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 1017 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்து 223 பதவிகளில் 798 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 34 ஆயிரத்து 807 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 9426 இடங்களில் தேர்தல் நடக்க உள்ளது.இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகொல்லியூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் மனு தாக்கல் செய்யாமல் அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர்.


